நடிகர் விஜய் உறவினரின் கார் ஓட்டுநர் மீது தாக்குதல்

x

சினிமா தயாரிப்பாளரும் நடிகர் விஜய் உறவினருமான சேவியர் பிரிட்டோவின் கார் ஓட்டுநரை தாக்கி செல்போன் பறிக்க முயற்சி செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சென்னை சாஸ்திரி நகரில் சேவியர் பிரிட்டோவின் ஓட்டுநர் கமல் என்பவரை தாக்கி, மர்மநபர்கள் 3 பேர் செல்போன் பறிக்க முயற்சித்துள்ளனர். கொள்ளையர்கள் தாக்கியதில், ஓட்டுநருக்கு 3 தையல் போடப்பட்டுள்ளது. மூன்று கொள்ளையர்கள் சேர்ந்து தாக்கியதில் ஓட்டுநர் கமலுக்கு, தலை நெற்றியில் மூன்று தையல் போடப்பட்டுள்ளன. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்