விடாமல் நடிகர் 'விஜய்' காரை விரட்டிய ரசிகர்கள் விபரீதத்தில் முடிந்த வீண் சாகசம்

நடிகர் விஜய்யை பார்ப்பதற்காக அவரது காரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் சென்ற 2 ரசிகர்கள் நிலை தடுமாறி விழுந்து காயமடைந்தனர்.
x

சென்னையை அடுத்த பனையூரில் ரசிகர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திப்பதற்காக நடிகர் விஜய் தனது நீலாங்கரை வீட்டிலிருந்து காரில் புறப்பட்டு சென்றார். இதையடுத்து அவரது வீட்டின் முன் திரண்டிருந்த ரசிகர்கள் நடிகர் விஜய்யின் காரை பின் தொடர்ந்து சென்றனர். சாலையில் ஆபத்தான முறையில் பயணித்த சில ரசிகர்கள் விஜய்யை செல்போனில் புகைப்படமெடுக்க முயன்றனர். இந்நிலையில் விஜய் காரை பின்தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேர் நிலைநடுமாறி சாலையில் விழுந்தனர். அவர்கள் ஹெல்மெட் அணிந்திருந்ததால் லேசான காயத்துடன் தப்பினர். பின்னால் வந்தவர்கள் இருவரையும் மீட்டனர். இந்த சம்பவத்தில் இருசக்கர வாகனம் சேதமடைந்தது.


Next Story

மேலும் செய்திகள்