நடிகர் விஜய் பிறந்தநாள்; தமிழகத்தையே கலக்கிய ரசிகர்கள் | Actor Vijay

x

தமிழகம் முழுவதும் நடிகர் விஜயின் ரசிகர்கள் அவரது 49வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகின்றனர்...அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சென்னை திருவான்மியூர் பகுதியில் பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டு காலை உணவு வழங்கினார். முன்னதாக புத்திராங்கன்னி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.நாகப்பட்டினம் அவுரித்திடலில், ஏழை மக்களுக்கு இலவச கறி விருந்துடன் கூடிய பிரியாணி வழங்கப்பட்டது. நீண்ட வரிசையில் காத்திருந்து, பொதுமக்கள் மன மகிழ்ச்சியுடன் அதனை பெற்று சென்றனர். முன்னதாக விஜய் மக்கள் இயக்கத்தினர் பேருந்து நிலையம் முன்பு பட்டாசு வெடித்து, பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.புதுச்சேரி முருங்கப்பாக்கத்தை சேர்ந்த ஓவிய பட்டதாரி அறிவழகி தனது வீட்டில் 8 அடி உயரம், 8 அடி அகலத்தில் விஜய்யின் உருவத்தை ரங்கோலியாக வரைந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.நீலாங்கரையில் சென்னை புறநகர் மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் ஈசிஆர் சரவணன் ஏற்பாட்டில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் விழுப்புரத்தை சார்ந்த 9 மற்றும் 8ம் வகுப்பு பயிலும் வீரஜெயந்தன், கிரிஷ்ஜெய் ஆகிய இருவரும் ஆயிரம் கியூப்கள் மூலம் "ஹாப்பி பர்த்டே தளபதி" என்ற வார்த்தையுடன் விஜயின் முகம் வரைந்து அசத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்