விஜய்யிடம் வாழ்த்து பெற்ற நடிகர் சதீஷ்

x

நடிகர் சதீஷ், இயக்குநர் வெங்கி உள்ளிட்டோர் விஜய்யை சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மாஸ்டர், விக்ரம் படங்களில் அசோசியேட் இயக்குநராக பணியாற்றிய வெங்கி, அடுத்ததாக சதீஷை வைத்து புதிய படத்தை இயக்குகிறார். படத்தின் பணிகள் தொடங்குவதற்கு முன் விஜய்யை நேரில் சந்தித்த சதீஷ், தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதற்கு நன்றி சார் என நெகிழ்ந்துள்ளார். அதேபோல, தளபதி விஜய் அண்ணனிடம் ஆசி பெறுவது மகிழ்ச்சி என இயக்குநர் வெங்கி நெகிழ்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்