"ஒரு உதட்டோர புன்னகை...கவர்னர் போயிட்டு இருக்காரு.." ஸ்டாலினை புகழ்ந்து தள்ளிய நடிகர் சத்யராஜ்

x

திமுக அரசு துணிச்சலான அரசாங்கம் என, நடிகர் சத்யராஜ் புகழாரம் சூட்டினார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பெரம்பூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. திரைக்கலைஞர், உரைக்கலைஞர், திராவிடக் கலைஞர் என்ற தலைப்பில் நடைபெற்ற கூட்டத்தில், நடிகர்கள் சத்யராஜ், பொன்வண்ணன், அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய நடிகர் சத்யராஜ், திராவிடம், திராவிட மாடல் என்பது வெறும் வார்த்தை அல்ல, சித்தாந்தம் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்