நடிகர் ரித்தீஷ் மனைவிக்கு சிறை - பின்னணி என்ன?

காரைக்குடியில் செக் மோசடி வழக்கில் மறைந்த நடிகர் ரித்தீசின் மனைவி ஜோதீஸ்வரிக்கு 6 மாத சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளது...

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நகைக்கடை வைத்திருக்கும் திருச்செல்வம் என்பரிடம் 60 லட்சம் ரூபாய்க்கு தங்க, வைர நகைகள் வாங்கியதில் மறைந்த திரைப்பட நடிகரும் முன்னாள் ராமநாதபுரம் MPயுமான ரித்தீஷின் மனைவி ஜோதிஸ்வரி கொடுத்த செக் பணம் இல்லாமல் திரும்பியுள்ளது... இதைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு திருச்செல்வம் வழக்கு தொடர்ந்துள்ளார். காரைக்குடி விரைவு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில், கடந்த செவ்வாய் அன்று பணம் கட்டாத ஜோதீஸ்வரிக்கு 6 மாத சிறை தண்டனையும், 60 லட்சம் ரூபாய் பணத்தைக் கட்ட வேண்டும் என நீதிபதி பரபரப்புத் தீர்ப்பளித்தார்... மேலும் பணத்தைக் கட்ட தவறினால் மேலும் 3 மாத சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். 1 மாதத்திற்குள் பணத்தை வழங்க வேண்டும் என்று கூறி பிணை வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com