நகைச்சுவை ஜாம்பவான்!! தமிழக திரைபட வரலாற்றில் முத்திரை பதித்த மகா கலைஞர் நாகேஷ் மறைந்த தினம் இன்று

x

1933ல் தாராபுரத்தில் பிறந்த நாகேஷ் கோவையில் கல்லூரி படிப்பை முடித்த பின், ரயில்வே துறையில் பணியாற்றினார். சிறுவயதில் இருந்தே நடிப்பின் மீது பற்றுக் கொண்ட நாகேஷ் அமெச்சூர் நாடகங்களில் நடித்து வந்தார்.

1959ல் தாமரைக்குளம் என்ற படத்தின் மூலம் திரைத் துறையில் அறிமுகமானார்.

காதலிக்க நேரமில்லை படத்தில் திரைபட இயக்குனராக முயற்சி செய்யும் இளைஞராக நடித்து பெரும் புகழ் பெற்றார்.

நடனமாடுவதில் புதிய பாணியை பின்பற்றிய நாகேஷின் திரைப்பட வாழ்வில் திருப்பு முனை ஏற்படுத்திய படம் சர்வர் சுந்திரம்.

பாலசந்தரின் நீர்குமிழி படத்தில் கதநாயாகனாக நடித்து சோக ரசத்தை பிழிந்தார்.

திருவிளையாடல் படத்தில் தருமியாக நடித்து, சிவாஜி கணேசனுக்கு ஈடு கொடுத்தார்.தில்லானா மோகனாம்பாள் படத்தில் வைத்தி வேடத்தில் நடித்து, முத்திரை பதித்தார்.

1990ல் வெளியான மைக்கேல் மதன காமராஜன் படத்தில் கமலுடன் சேர்ந்து நடித்தார்.

தமிழக திரைபட வரலாற்றில் முத்திரை பதித்த மகா கலைஞர் நாகேஷ் மறைந்த தினம், 2009 ஜனவரி 31.


Next Story

மேலும் செய்திகள்