நகைச்சுவை நடிப்பில் முத்திரை பதித்த நடிகர் கவுண்டமணி பிறந்த தினம் இன்று...

x

1939ல், உடுமலைப்பேட்டை அருகே உள்ள வல்லகுண்டா புரம் கிராமத்தில் பிறந்த கவுண்டமணியின் இயற்பெயர் சுப்பிரமணியன் ஆகும். நடிப்பில் ஆர்வம் கொண்டிருந்த கவுண்டமணி, பள்ளி கல்வியை முடித்த பின், சென்னைக்கு சென்று நாடகங்களில் நடிக்க தொடங்கினார்.

1964ல் வெளியான சர்வர் சுந்தரம் படத்தில் ஒரு துணை நடிகராக அறிமுகமானர். 1977ல், பாரதிராஜாவின் முதல் படமான '16 வயதினிலே' படத்தில் ரஜினியின் கூட்டாளியாக நடித்து, 'பத்த வெச்சிட்டியே பரட்ட' என்ற வசனத்தின் மூலம் பிரபலமானார்.

கரகாட்டக்காரன் படத்தில் இடம்பெற்ற வாழைப்பழ காமெடி உலகப் புகழ் பெற்றது.

சூரியன் படத்தில் அவர் பேசிய "அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா" என்ற டயலாக் காலத்தால அழியாத அரசியல் விமர்சனமாக பார்க்கப்படுகிறது.

நாட்டாமை படத்தில் செந்திலின் மகனாக நடித்து, தகப்பனை டேய் தகப்பா என்று அழைத்து கலக்கியிருப்பார்.

மாமன் மகள் படத்தில் சத்தியராஜின் நடிப்பை பார்த்து, இது உலக மகா நடிப்புடா சாமி என்ற வசனம் இன்றும் மீம்ஸ்களில் பயன்படுத்தப்படுகிறது.

சுமார் 450 படங்களில் நடித்துள்ள கவுண்டமணி, கதாநாயகனாகவும், குணச்சித்திர நடிகராகவும் பல படங்களில் நடித்துள்ளார்.

தலைமுறைகள் கடந்து, நகைச்சுவை நடிப்பில் அனைவரை யும் கவர்ந்த கவுன்ட்டர்களின் மன்னன் கவுண்டமணி பிறந்த தினம், 1939 மே 25.


Next Story

மேலும் செய்திகள்