நடிகர் ஈ.ராம்தாஸ் மாரடைப்பால் உயிரிழப்பு...சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் கலக்கியவர்

x

நடிகரும் எழுத்தாளருமான ஈ.ராம்தாஸ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

தமிழ் சினிமாவில் நடிகராகவும் எழுத்தாளராகவும் வலம் வந்தவர் ஈ.ராமதாஸ்...

குறிப்பாக வசூல்ராஜா எம்பிபிஎஸ், யுத்தம் செய், ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, குக்கூ, காக்கி சட்டை, விசாரணை, மெட்ரோ, தர்மதுரை, விக்ரம் வேதா, மாரி, நாடோடிகள் என எண்ணற்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர்.

பல திரைப்படங்களில் எழுத்தாளராகவும் பணி புரிந்திருக்கிறார்.

இந்த நிலையில் ஈ.ராம்தாஸ் நேற்று இரவு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

அவரது உடல், கே.கே.நகர் முனுசாமி சாலையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.

பின்னர் மாலை 5 மணி அளவில், நெசப்பாக்கம் மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட உள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்