நடிகர் திலீப் வழக்கு ...குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு | Kerala | Dhilip

x

நடிகர் திலீப் வழக்கு ...குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

நடிகை தாக்கப்பட்ட வழக்கில் நடிகர் திலீப் எட்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் 112 பேரின் வாக்குமூலங்கள் மற்றும் 300க்கும் மேற்பட்ட கூடுதல் ஆதாரங்களுடன் ஆயிரம் பக்கம் துணை குற்றப்பத்திரிகையை குற்றப்பிரிவு போலீசார் தயாரித்துள்ளது. இந்த தொடர் விசாரணை அறிக்கையை நிராகரிக்கக்கோரி திலீப்பும் அவரது நண்பரும் சரத் ஆகியோர் எர்ணாகுளம் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. போலீசாரின் தொடர் விசாரணை அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. குற்றப்பத்திரிகையை வரும் 31ம் தேதி தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டுள்ளது. அன்று திலீப் மற்றும் அவரது நண்பர் சரத் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்