விண்வெளியில் தீவிரமாய் நடக்கும் வேலைகள்... பூமிக்கு திரும்பிய வீர‌ர்கள் - என்ன செய்கிறது சீனா ?

x

சீனா தனக்கென சொந்தமாக ஒரு விண்வெளி நிலையத்தை 'தியான்ஹே' என்ற பெயரில் புவி வட்டப் பாதையில் அமைத்து வருகிறது.

இதன் கட்டுமானப் பணிக்காக சுழற்சி முறையில் விண்வெளி வீர‌ர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஜூன் 5ஆம் தேதி ஷென்சோ-14 என்ற விண்கலம் மூலம் 3 விண்வெளி வீர‌ர்கள் சென்று, 6 மாதங்களாக பணிகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில், அவர்களுக்கு மாற்றாக 3 வீர‌ர்கள் அனுப்ப‌ப்பட்டதால், ஏற்கனவே பணிபுரிந்து வந்த மூன்று பேரும் பூமிக்கு திரும்பினர்.

மங்கோலியா அருகே உள்ள இடத்தில் விண்கலம் பத்திரமாக தரையிறங்கியது.

ஹெலிகாப்டரில் அங்கு சென்ற அறிவியலாளர்கள் மற்றும் மருத்துவக் குழுவினர், வீர‌ர்களை வரவேற்றனர்.

பின்னர், பரிசோதனை செய்த மருத்துவர்கள், மூன்று பேரும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்