தாஜ்மஹாலில் ட்ரோன் பறப்பதை தடுக்க நடவடிக்கை | Taj Mahal

x

ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலில் ட்ரோன் பறப்பதை தடுக்கும் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தியாவில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலங்களில் ஒன்றான தாஜ்மஹாலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். தாஜ்மஹாலை சுற்றி ஆளில்லா விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், தொடர்ந்து ட்ரோன்கள் பறக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இதனை தடுக்க ஆன்ட்டி ட்ரோன் அமைப்பு சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதன்படி, ட்ரோன் தாஜ்மஹாலின் ரேடாரின் கீழ் வந்தவுடன் தானாகவே கீழே விழுந்துவிடும். இதற்காக சென்னையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று சோதனை ஓட்டம் நடத்தியுள்ளது. முதல் சோதனை ஓட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிலையில், இன்றும் இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்