மதுரையில் நடிகர் சூரி உணவகத்தில் அதிரடி சோதனை..

மதுரையில் நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகத்தில் வணிகவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். திரைப்பட நடிகர் சூரிக்கு சொந்தமாக பல்வேறு இடங்களில் 'அம்மன்' என்ற பெயரில் உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்த உணவகங்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி இல்லாமல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் வந்துள்ளது. இதனால் அம்மன் உணவகத்தில் வணிகவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இச்சோதனையின் போது ஜிஎஸ்டி செலுத்தவில்லை என்பது உறுதியான நிலையில், 3 நாட்களுக்குள் உணவக உரிமையாளர் மற்றும் மேலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com