இங்கிலாந்து அணியுடனான ஒப்பந்தத்தை முறித்த அதிரடி வீரர் ஜேசன் ராய்

x

இங்கிலாந்து கிரிக்கெட் அணி உடனான ஒப்பந்தத்தில் இருந்து தொடக்க வீரர் ஜேசன் ராய் விலகி உள்ளார். அமெரிக்க மேஜர் லீக் டி20 தொடரில் பங்கேற்பதற்காக ஒப்பந்தத்தை ராய் முறித்துக்கொண்டு உள்ளார். அமெரிக்க மேஜர் லீக் டி20 தொடரில் ஆட ராய்க்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அனுமதி அளித்துள்ளது. ஒப்பந்தத்தை முறித்தாலும் உலக கோப்பை தொடருக்கான பரிசீலனையில் ராய் இருப்பார் எனக் கூறப்படுகிறது. இதனிடையே, இங்கிலாந்து அணியை விட்டு செல்ல மாட்டேன் என்றும், தேசத்துக்காக விளையாடுவது பெருமை என்றும் ராய் கூறி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்