இலங்கை மீனவர்களை புழல் சிறையில் அடைக்க அதிரடி உத்தரவு | Ramanathapuram

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 6 இலங்கை மீனவர்கள் புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்திய கடல் எல்லைக்குள் புகுந்து மீன் பிடித்த இலங்கையை சேர்ந்த ஆறு மீனவர்கள் கடந்த 15 ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் ஆறு பேரும் ராமநாதபுரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களை விசாரித்த நீதிபதி டிசம்பர் 1ஆம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து இலங்கை மீனவர்கள் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

X

Thanthi TV
www.thanthitv.com