வந்தே பாரத் ரயிலில் வரும் அதிரடி மாற்றம் | Vande Bharat Express

x

2023இன் இறுதிக்குள், இந்தியாவில், ஹைட்ரஜனில் இயங்கும் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

ஹைட்ரஜன் வாயுவை எரிபொருளாக கொண்ட ரயில் எஞ்சின்களை வடிவமைத்து, தயாரிக்கும் திட்டத்தை இந்திய ரயில்வே தீவிரப்படுத்தியுள்ளது. மிகக் குறைந்த சத்தத்தில் இயங்கும் திறன் கொண்ட் ஹைட்ரஜன் எஞ்சின்கள், நீராவியை மட்டும் வெளிப்படுத்தும் என்பதால், காற்று மாசு மிக மிக குறைவாக இருக்கும். பசுமை வாயு வெளிபாட்டை தவிர்த்து, புவி வெப்பமயமதாலை குறைக்கும் திறன் கொண்ட ஹைடரஜன் எஞ்சின் தொழில்நுட்பத்தை மேம்படுத்த உலகெங்கும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. 2023 டிசம்பருக்குள் இந்தியாவின் ஹைட்ரஜன் எஞ்சினில் இயங்கும் ரயில் உருவாக்கப்பட்டு, இயக்கப்படும் என்று அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார். வந்தே மெட்ரோ என்ற பெயரிடப்பட உள்ள ஹைட்ரஜன் ரயில்கள் பெரும் எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டு, பழைய மாடல் டீசல் எஞ்சின்களுக்கு பதிலாக நாடு முழுவதும் இயக்கப்படும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்