சாதிக்கவும்... முயற்சிக்கவும் ஊனம் ஒரு தடையல்ல... இசை மழை பொழிந்து வரும் மாற்றுத்திறனாளி சிறுவன்

சாதிக்கவும்... முயற்சிக்கவும் ஊனம் ஒரு தடையல்ல...   இசை மழை பொழிந்து வரும் மாற்றுத்திறனாளி சிறுவன்
x

சாதிக்கவும்... முயற்சிக்கவும்... ஊனம் ஒரு தடையல்ல என சிறு வயதிலேயே பலருக்கும் உணர்த்தி வரும் கேரளாவை சேர்ந்த சிறுவன் இசை பயணத்தை தற்போது பார்க்கலாம்.

போதும் என்ற மனம் இல்லாத இன்றைய உலகில்... மனித குலம் எல்லாம் இருந்தும்... எல்லாவற்றிலும் குறை கூறிக்கொண்டு... எதிலும் திருப்தியற்ற வாழ்க்கையே வாழ்ந்து கொண்டிருக்கிறது.

ஆனால் பிறவியிலேயே கை கால்கள் முழுமையாக வளர்ச்சியடையாத நிலையில், மாற்றுத்திறனாளியாக பிறந்த ஒரு சிறு பாலகன்... அதனை ஒரு பெரிய குறையாக கருதி சோர்வடையாமல்... இன்று பலரையும் தனது இசையால் உற்சாகப்படுத்தி வருகிறான்.

பத்து விரல்கள் கொண்டு கீபோர்டு வாசித்து வருபவர்களுக்கு மத்தியில்...முழுமையாக வளர்ச்சி அடையாத விரல்கள் அற்ற தனது ஒற்றை கையால் இவன் இசைக்கும் பாடல்கள்... கேட்போரின் மனங்களை அமைதி கொள்ள செய்கின்றன. குறிப்பாக கண்ணில் துணியை கட்டிக்கொண்டு கீபோர்டு வாசிப்பது முகமது யாசீனின் தனித்திறமையாகும்.

இது வெறும் ஆரம்ப கட்டம் தான் என்றாலும்... எந்த கைகள் இல்லை என்று இந்த உலகம் தன்னை பார்த்து பரிதாபப் பட்டதோ.... அதே உலகமறிந்த பிரபலமாக உருவெடுக்க வேண்டும் என்பதுதான் இந்த சிறுவனின் லட்சியம்.

கேரள மாநிலம் காயங்குளத்தை சேர்ந்த ஷாநவாஸ் - லைலா தம்பதியரின் மூத்த மகனான இந்த சிறுவனின் பெயர் முகமது யாசீன். தற்போது பத்து வயதான இந்த சிறுவன் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

சினிமா பாடல்களை கீபோர்டில் இசைத்து வருகிறேன்" "பள்ளி நிர்வாகம், நண்பர்கள் ஆதரவாக உள்ளனர்"

மாற்றுத்திறனாளியானபோதும் தனது ஒற்றை கைகளால் கீபோர்டு வாசிக்கும் சிறுவனின் திறமையை சமூக ஊடகங்கள் வாயிலாக கண்டு ரசித்ததோடு மனமாற பாராட்டி வருகின்றனர் வலைதளவாசிகள். கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன் குட்டி, யாசீனை பாராட்டி ட்வீட் போட... கேரளா முழுவதும் தற்போது லிட்டில் சூப்பர் ஸ்டாராக பிரபலமடைந்து விட்டார், முகமது யாசீன்.

இந்நிலையில், பிரபல இசை அமைப்பாளர் பிரதீஷ் சிறுவனின் வீடு தேடி சென்று அவரை பாராட்டியுள்ளார். மேலும், சிறுவனை ஊக்குவித்து உரிய வழி காட்டினால் அவன் தனது திறமையை மேலும் வெளிப்படுத்த தயாராவான் என அவர் கூறினார்.



Next Story

மேலும் செய்திகள்