குவியும் குற்றச்சாட்டுகள் - இரவில் ஆட்சியர் அலுவலகலத்தில் ஊழியர்கள் போராட்டம்

x

200க்கும் மேற்பட்ட ஊழியர்கள், ஊரக வளர்ச்சி துறையின் உதவி இயக்குனர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றும் பெண் ஊழியர்களை இரவு நேரத்தில் பணியாற்ற நிர்பந்திப்பது, வாட்ஸ் அப்பில் தேவையில்லாமல் கூட்டங்களை நடத்துவது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை ஊரக வளர்ச்சித் துறையின் உதவி இயக்குனர் மீது ஊழியர்கள் முன்வைத்தனர். இந்நிலையில், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரவு நேரத்தில், ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்