பைக் மீது கார் மோதி விபத்து - நெடுஞ்சாலையில் தூக்கி வீசப்பட்ட பெண் - கால்கள் மீது ஏறி இறங்கிய லாரி

x

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே, லாரி ஏறியதில் பெண்ணின் இரு கால்களும் நசுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சப்பள்ளி கிராமத்தை சேர்ந்த நாகராஜும், அவருடைய மனைவி பார்வதியும் கிருஷ்ணகிரிக்கு சென்று விட்டு இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

மேலுமலை கனவாய் என்ற இடத்தில் வந்தபோது, அவர்களின் வாகன்திதன் மீது கார் மோதியதில், பார்வதி தேசிய நெடுஞ்சாலையின் நடுவே தூக்கி வீடப்பட்டார்.

அப்போது, பின்னால் வந்த லாரி ஏறியதில், பார்வதியின் இரண்டு கால்களும் நசுங்கின.

வலியால் கதறி அழுத அவரை, போலீசார் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்