வேகமெடுக்கும் கொரோனா... ஒரே நாளில் 10,093 பேருக்கு பாதிப்பு

x

இந்தியாவில் ஒரே நாளில் 10 ஆயிரத்து 93 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவிற்கு சிகிச்சை பெறுகிறார் எண்ணிக்கை 57 ஆயிரத்து 542ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரே நாளில் 6 ஆயிரத்து 248 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில், குணமடைந்தோர் சதவீதம் 98.68ஆக உள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 23 பேர் தொற்று பாதிப்பால் பலியாகியுள்ளனர். கொரோனா அதிகம் பாதித்த மாநிலங்கள் பட்டியலில் கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி, ஹரியானா, உத்தர பிரதேசம், தமிழ்நாடு ஆகியவை இடம் பெற்றுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்