குஜராத் கலவரம்.. மோடியின் ஆவணப்படம் பார்த்த மாணவர்கள் மீது சரமாரி தாக்குதல்.. டெல்லி JNU பல்கலை.-யில் பதற்றம்..!

குஜராத் கலவரம்.. மோடியின் ஆவணப்படம் பார்த்த மாணவர்கள் மீது சரமாரி தாக்குதல்.. டெல்லி JNU பல்கலை.-யில் பதற்றம்..!
Published on

பிரதமர் மோடியின் தடை செய்யப்பட்ட ஆவணப்படத்தை பார்த்த புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது, ஏ.பி.வி.பி. (ABVP) அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி, குஜராத் முதலமைச்சராக இருந்த போது ஏற்பட்ட கலவரம் தொடர்பாக சர்வதேச ஊடகம் ஒன்று, ஆவணப்படத்தை சமீபத்தில் வெளியிட்டிருந்தது.

சர்ச்சைக்குரிய கருத்துகள் நிறைந்துள்ளதாகக் கூறி அந்த ஆவணப்படம் இந்தியாவில் தடை செய்யப்பட்டது.

இந்நிலையில், புது டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் அந்த ஆவணப்படத்தை திரையிட ஏற்பாடு செய்திருந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக நிர்வாகம் மின்சாரம் மற்றும் இணைய சேவையை துண்டித்தது.

இதையடுத்து, மாணவர்கள் தங்கள் செல்போன் மற்றும் லேப்டாப்களில் ஆவணப்படம் பார்த்த போது, ஏ.பி.வி.பி. அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் கல்லெறிந்து தாக்குதல் நடத்தியதாகக் கூறி புகாரளிக்கப்பட்டது

X

Thanthi TV
www.thanthitv.com