அபுதாபியில் கமலுக்கு கவுரவம்!

x

ஆறு வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல்ஹாசன், நாயகன், இந்தியன், ஹேராம், தசாவதாரம், விருமாண்டி உள்ளிட்ட பல படங்களில் அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். பத்மஸ்ரீ, பத்ம பூஷன் உள்ளிட்ட உயரிய விருதுகளை பெற்ற அவருக்கு, தற்போது சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் விருது வழங்கப்படுகிறது. அபுதாபியில் வரும் 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த விழாவில், ரித்தேஷ் தேஷ்முக் - ஜெனிலியா தம்பதிக்கு பிராந்திய திரைப்படங்களுக்கான சாதனையாளர் விருதும், பிரபல ஆடை வடிவமைப்பாளர் மணீஸ் மல்ஹோத்ராவுக்கு சிறந்த வடிவமைப்பாளருக்கான விருதும் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்