அண்ணாமலை வாட்ச் குறித்து - கோவை வாட்ச் கம்பெனி பரபரப்பு தகவல்

கோவையில் உள்ள சிம்சம் வாட்ச் விற்பனை கடையில் ரபேல் வாட்ச், சேரலாதன் என்பவருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ரூ.3 லட்சத்திற்கு ரஃபேல் வாட்சை வாங்கியதாக கூறிய அண்ணாமலை, அதற்கான பில்லை வெளியிட்டார். அதில் சேரலாதன் இராமகிருஷ்ணன் என்ற பெயரில் கடந்த 2021 ம் தேதி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அதில் அவருடைய தொடர்பு எண்ணும், ஜி.எஸ்.டி எண்ணும் அடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கோவை பந்தய சாலையில் இயங்கிவரும் சிம்சன் வாட்ச் கடையின் கிளை மேலாளர் பிரசாத் என்பவர், தங்களது கடையில் தான், சேரலாதன் ராமகிருஷ்ணன் என்பவர் ரஃபேல் வாட்சை வாங்கியதாக கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com