ஆவின் பால் விலை அதிரடி உயர்வு... - எந்த நிற பாக்கெட் பாலின் விலை உயர்வு | Aavin Milk

x

ஆவின் பால் விலை அதிரடி உயர்வு... - எந்த நிற பாக்கெட் பாலின் விலை உயர்வு

வரும் 5-ஆம் தேதி முதல், சில்லறை விற்பனை விலையில் விற்கப்படும் நிறைகொழுப்புப் பாலின் விலை லிட்டருக்கு 60 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.வரும் 5-ஆம் தேதி முதல், பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் உயர்த்துவதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் ஏற்படும் கூடுதல் செலவினத்தை ஈடு செய்யும் வகையில்,சில்லறையில் விற்கப்படும் நிறைகொழுப்பு பாலின் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூபாய் 60-ஆக உயர்த்தப்படுகிறது. அதேசமயம், மாதாந்திர அட்டைதாரர்களுக்கு எவ்வித விலைமாற்றமும் இல்லாமல்,நிறைகொழுப்பு பால் லிட்டர் 46 ரூபாய்க்கே விற்பனை செய்யப்படும்.இருப்பினும், நுகர்வோர்களின் நலன் கருதி சமன்படுத்தப்பட்ட பால் (Toned Milk, நீல நிறம்), நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardized Milk, பச்சை நிறம்) ஆகியவற்றின் விலையில் மாற்றமின்றி தற்போதைய நிலையே தொடரும் என்று ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்