நடமாடும் ஆவின் ஐஸ்கிரீம் விற்பனை வாகனம்.. தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

நடமாடும் ஆவின் ஐஸ்கிரீம் விற்பனை வாகனம்.. தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Published on

சென்னையில், நடமாடும் ஆவின் ஐஸ்கிரீம் விற்பனை வாகனத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கோடை காலத்தை முன்னிட்டு, இல்லம் தேடி ஆவின் திட்டத்தின்கீழ் சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், ஆவின் ஐஸ்கிரீம், தயிர், மோர், லஸ்ஸி போன்ற பொருட்களை விற்பனை செய்வதற்காக, 32 பேட்டரி வாகனங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று தொடங்கி வைத்தார். 40 லட்சம் ரூபாய் செலவில் சுய தொழில் மற்றும் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் வகையில், பேட்டரி ஐஸ்கிரீம் விற்பனை வாகனங்கள் பெண்களுக்கு வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் நாசர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com