கடத்தப்பட்டாரா ஆம் ஆத்மி வேட்பாளர்?-குஜராத் தேர்தலில் புதிய பூகம்பம் -வெளியான அதிர்ச்சி தகவல்

x

குஜராத் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆம் ஆத்மி கட்சி சார்பில் சூரத் கிழக்கு தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர், கஞ்சன் ஜரிவாலா.

இவரை நேற்று மதியம் முதல் குடும்பத்தோடு காணவில்லை என்றும், அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆம் ஆத்மி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் சிசோடியா மற்றும் குஜராத் மாநில ஆம் ஆத்மி வேட்பாளர் இசுதன் காட்வி ஆகியோர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் புகார் பதிவிட்டுள்ளனர்.

ஜரிவாலாவை வேட்புமனு தாக்கல் செய்யவிடாமல் தொடர்ந்து பாஜக பல்வேறு இடைஞ்சல்கள் கொடுத்து வந்ததாகவும், அதையும் மீறி அவர் வேட்பு மனு தாக்கல் செய்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, வேட்புமனுவை வாபஸ் பெறுமாறு பாஜகவினரால் மிரட்டப்பட்டும் ஜரிவாலா பின்வாங்காததால் அவரை குடும்பத்துடன் பாஜக கடத்தியிருக்கக்கூடும் என்றும் அவர்கள் சந்தேகம் எழுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்