ரிலீசுக்கு முன்பே பல கோடி ரூபாய்க்கு வியாபாரமான "ஆதிபுருஷ்"

x

நடிகர் பிரபாசின் ஆதி புருஷ் திரைப்படம் ரிலீசுக்கு முன்பே பல கோடி ரூபாய் வியாபாரமாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படம் ஆதி புருஷ்... இதில் பிரபாஸ், சயீப் அலிகான், கீர்த்தி சனோன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் தயாரித்து வரும் நிலையில், 3டி தொழில்நுட்பத்தில் வரும் 16ம் தேதி ஆதிபுரூஷ் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், ரிலீசுக்கு முன்பே ஆதிபுரூஷ் திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 170 கோடி ரூபாய்க்கு வெளியிடும் உரிமத்திற்கு வியாபாரம் ஆகியுள்ளதாகவும், பிபள் மீடியா ஃபேக்டரி இதை வெளியிடுவதற்கான உரிமத்தைக் கைப்பற்றி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்