ஆதாருக்கு 2 வருடமாக அலையவிட்டு கிண்டல் அடித்த ஆதார் மையம் - கண்ணீர் விட்டு கதறும் பெண்
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில், உயிருடன் உள்ள பெண்ணை இறந்ததாக ஆதார் கார்டில் குறிப்பிட்ட நிலையில், அதனை மாற்றாமல் அலைகழிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா சேத்தூர் ஊராட்சிக்குட்பட்ட ஆலம்பட்டியில் வசித்து வருபவர் ஜரீனா பேகம். இவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் சேர்வதற்காக தனது ஆதார் கார்டு கொடுத்துள்ளார். அவர்கள் இந்த ஆதார் அட்டை செல்லுபடி ஆகாது புதிய ஆதார் கார்டு எடுத்து வாருங்கள் என்று சொன்னதாக கூறப்படுகிறது. ஜரினா பேகம் நத்தம் ஆதார் மையத்துக்கு சென்ற நிலையில், புதிய ஆதார் அட்டை எடுத்தவுடன் ரத்து செய்யப்பட்டது என வருவதாக கூறியுள்ளனர். இறந்து விட்டதாக ஆதார் மைய கணினியில் வருவதாக கூறி, அங்குள்ளவர்கள் ஜரீனா பேகத்தை கிண்டல் செய்துள்ளனர். எனவே தமக்கு ஆதார் கார்டு வழங்க அரசு உதவிட வேண்டும் என ஜரீனா பேகம் கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார்.
