தீபாவளியன்று காணாமல் போன இளைஞர்... வீட்டின் பின்புறம் உள்ள புதரில் சடலமாக மீட்பு -அதிர்ச்சி சம்பவம்

x

தீபாவளியன்று காணாமல் போன இளைஞர்... வீட்டின் பின்புறம் உள்ள புதரில் சடலமாக மீட்பு -அதிர்ச்சி சம்பவம்

திண்டுக்கலில் தீபாவளியன்று காணாமல் போன இளைஞர் ஒருவர் வீட்டின் பின்புறம் சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் குடைப்பாறைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சையது முகமது. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவரை, தீபாவளி முதல் மூன்று நாட்களாக காணவில்லை என கூறி அவரது குடும்பத்தார் போலீசில் புகாரளித்தனர். இந்நிலையில், இன்று காலை அவர்களது வீட்டிற்கு பின்புறம் உள்ள புதரில் மர்மமான முறையில் சையது முகமது சடலமாக கிடப்பதாக காவல் துறைக்கு தகவல் அளித்தனர். உடனே, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்