தீப்பெட்டி கேட்டதால் வெடித்த கலவரம்.. படுத்திருந்த இளைஞர் வெட்டிக் கொலை

x

தீப்பெட்டி கேட்டதுக்கு எல்லாம் யாராது கொலை பண்ணுவாங்களா...? யோசிச்சி பாக்கவே ரொம்ப சில்லி தனமா இருக்குலா...? ஆனா நீங்க நம்புலனாலும் அது தான் இங்க நடந்திருக்கு...

கண்டெயினர் லாரியும் வாகனங்களும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த கடற்கரை பகுதி… அன்று இரவு காவல்துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது…

சந்தேகத்தின் அடிப்படையில் இளைஞர்கள் சிலரை அழைத்து வந்த போலீசார்… அவர்களை சம்பவ இடத்தில் வைத்து விசாரணையை தொடங்கினார்கள்..

ஆம், கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படகில் வைத்து ஒருவர் கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்டிருக்கிறார்.

கொல்லப்பட்டவர் 22 வயதாகும் சஞ்சய். சென்னை வியாசர்பாடி பாரதிநகரைச் சேர்ந்தவர். பெரம்பூரில் துணிக்கடை வைத்து நடத்தி வந்துள்ளார்…

தற்போது சொந்தமாக பிஸ்னஸ் செய்துவந்த சஞ்சய், சில வருடங்களுக்கு முன்பு chain snatching வழக்கில் சிறைக்குச் சென்றுள்ளார்.

காயம் ஆறினாலும் வடு மறையாது என்பார்கள்… என்னதான் திருந்தி நல்ல பிள்ளையாக வாழ்ந்தாலும் சஞ்சய்க்குள் இருந்த பழைய ruggerd குணம் அப்படியேதான் இருந்துள்ளது. அந்த முரட்டு குணமே ரம்ஜான் பண்டிகை அன்று சஞ்சயின் உயிரை காவு வாங்கியிருக்கிறது.

சம்பவம் நடந்த அன்று சஞ்சயும் அவரது நண்பர்களும் திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் கடற்கரை சாலையில் மது அருந்தியிருக்கிறார்கள்.

அப்போது அதே பகுதிக்கு திருவொற்றியூர் பூங்காவனபுரத்தை சேர்ந்த தேவராஜ் என்பவர் நண்பர்களுடன் வந்து மது அருந்தியிருக்கிறார்.

இரண்டு கேங்க்கும் தெளிய தெளிய மது குடித்து ரம்ஜான் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடியிருக்கிறார்கள்… அப்போது சஞ்சயின் நண்பர் அஜித் என்பவர் பக்கத்து கேங்கை சேர்ந்த தேவராஜ் என்பவரிடம் சிகரெட் பற்றவைக்க தீப்பட்டி கேட்டுள்ளார்… இருதரப்பும் போதையிலிருந்ததால் ஈகோ உரச, வாய் தகராரு சண்டையாக பற்றி எரிந்திருக்கிறது… நடந்த கலவரத்தில் சஞ்சய் தேவராஜை அடித்து அவமானபடுத்தியதாக கூறப்படுகிறது…

பிறகு இருதரப்பும் இடத்தை காலிச்செய்ய… சஞ்சய் திருச்சிணாங்குப்பம் கடற்கரைக்கு சென்று படகில் படுத்து உறங்கியிருக்கிறார்.. ஆனால், ஏரியாவிட்டு ஏரியா வந்து சஞ்சய் அடித்தது தேவராஜிற்கு அவமானத்தையும் கொலை வெறியையும் உருவாக்கியிருக்கிறது… பழிக்கு பழி தீர்க்க நண்பர்களை அழைத்துக் கொண்டு சஞ்சயை வலைவீசி தேடியிருக்கிறார் தேவராஜ் …

தேடலின் முடிவில் சஞ்சய் படகில் தனியாக படுத்திருந்ததை நோட்டமிட்ட அந்த கும்பல்… அரிவாளால் சரமாரியாக சஞ்சயை வெட்டியிருக்கிறது…

சஞ்சயின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த பொதுமக்கள் காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்… உடலில் பலத்த காயம் ஏற்பட்டதால் சஞ்சய் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துபோயிருக்கிறார்…

இக்கொலை தொடர்பாக தேவராஜ் உள்பட எட்டுப்பேரைக் கைதுச் செய்த போலீசார் தலைமறைவாக இருக்கும் மற்றொரு குற்றவாளியை தேடி வருகின்றனர்..


Next Story

மேலும் செய்திகள்