விசா வழங்க தாமதம் - டிராவல்ஸ் அலுவலக இளம் பெண்ணின் கழுத்தை அறுத்த இளைஞர்

கேரள மாநிலம் கொச்சியில், டிராவல்ஸ் அலுவலகத்தில் புகுந்து, இளம் பெண்ணின் கழுத்தை அறுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
x

கொச்சி அருகே பள்ளுருத்தி பகுதியை சேர்ந்த ஜோளி என்பவர், எர்ணாகுளம் பகுதியில் இயங்கி வரும் டிராவல்ஸ் நிறுவனத்தில், விசாவுக்காக பணம் செலுத்தி இருந்தார். விசா வழங்காமல் ஏமாற்றி வந்ததால், ஆத்திரமடைந்த ஜோளி, அங்கிருந்த பெண் ஊழியர் சூரியா என்பவரிடம், வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த ஜோளி, கத்தியால் சூரியாவின் கழுத்தை அறுத்துள்ளார். கழுத்தில் ரத்தம் கொட்டியபடி, அருகில் இருந்த உணவகத்திற்கு தப்பிச் சென்ற சூரியாவை, அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தப்பியோட முயன்ற ஜோளியை, பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்