திருமணத்துக்கு பெண் தர மறுத்த தம்பதியை சுட்டு வீழ்த்திய இளைஞர்... விழுப்புரத்தில் அதிர்ச்சி

x

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே, திருமணத்திற்கு பெண் தர மறுத்த தம்பதியை, நாட்டுத் துப்பாக்கியால் சுட்ட சம்பவத்தில், இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கடையம் கிராமத்தை சேர்ந்த கோவிந்தன் - கலையம்மாள் தம்பதிக்கு மூன்று மகள், ஒரு மகன் உள்ள நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த பாரதி என்பவரையும் சிறுவயதில் இருந்து வளர்த்து வந்துள்ளனர். கோவிந்தனின் மூத்த மகளை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு, பாரதி கேட்டதாக தெரிகிறது. இதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த பாரதி, நாட்டு துப்பாக்கியால் கோவிந்தனின் தலையில் சுட்டதாக கூறப்படுகிறது. அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த மனைவி கலையம்மாளையும், நாட்டு துப்பாக்கியால் காலில் சுட்டதாக தெரிகிறது. உடனடியாக இருவரையும் மீட்ட அக்கம் பக்கத்தினர், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில், தப்பிச் சென்று காப்புக்காட்டில் மறைந்திருந்த பாரதியை, 36 மணி நேர தேடுதலுக்குப் பின்னர் போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்