சோசியல் மீடியாவில் காதல் - இளைஞரும், பள்ளி மாணவியும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே, சமூகவலைதளம் மூலம் காதலித்து வந்த ஐடிஐ மாணவனும், பள்ளி மாணவியும், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது.
x

போளூர் அடுத்த வடமாதிமங்கலம் ரயில்வே தண்டவாளத்தில், அரியாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவர், போளூரில் உள்ள தனியார் ஐடிஐயில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இவரும், ஆரணி அருகே வசித்து வந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவியும் சமூக வலைதளம் மூலம் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த இருவரும், காட்பாடி நோக்கிச் செல்லும் ரயில்வே தண்டவாளத்தில், விழுப்புரத்திலிருந்து திருப்பதி நோக்கிச் செல்லும் ரயில் முன் பாய்ந்ததில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்