தொடர்ச்சியாக 24 மணி நேரத்தில் 92 நபர்களுக்கு முடிதிருத்தம் - உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த இளைஞர்

x

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, சேலம் மாரமங்கலத்துப்பட்டியில் சலூன் கடை நடத்தி வரும் சபரிநாதன் என்பவர், தொடர்ந்து 24 மணி நேரம் முடிதிருத்தம் செய்து சாதனை படைத்துள்ளார். அவர் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கி, மறுநாள் காலை 9 மணி வரை இடைவிடாமல் 92 பேருக்கு இலவசமாக முடிதிருத்தம் செய்துள்ளார்.

இந்த சாதனையின் மூலம், வேர்ல்ட் சூப்பர் டேலண்ட் புக் ஆப் ரெக்கார்டு சாதனை புத்தகத்தில் அவர் இடம் பிடித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்