பைக்கில் சென்ற இளைஞரை திரும்ப திரும்ப காரால் ஏற்றி கொல்ல முயற்சி... மனதை உலுக்கும் வைரல் வீடியோ

x

கேரள மாநிலம் கொல்லத்தில், இளைஞரை கார் ஏற்றி கொல்ல முயற்சித்த சம்பவத்தின் பரபரப்பு சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கொல்லம் கிஷ்கேமர்நாடு பகுதியை சேர்ந்த மனு என்ற இளைஞர், தனது இருசக்கர வாகனத்தில் எழுகோன் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது பின்னால் வேகமாக வந்த வெள்ளை நிற கார், மனுவின் பைக் மீது வேகமாக மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்ட நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அப்போது, சாலையில் பயணித்தவர்கள், காயமடைந்தவரை மீட்டபோது, திரும்பி வந்த கார், மனு மீது மீண்டும் ஏற்றிக் கொல்ல முயற்சித்தது. அப்போது அவர் சுதாரித்து நகர்ந்ததால், விபரீதம் ஏதும் ஏற்படவில்லை. இதுதொடர்பாக புகார் ஏதும் கொடுக்கப்படாத நிலையில், இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்