கிருஷ்ணகிரியில் வீட்டில் தனியாக இருந்த பெண்..கழுத்தை நெறித்துக் கொலை! - பணத்திற்காக கொல்லப்பட்டாரா?

x

கிருஷ்ணகிரியில், வீட்டில் தனியாக இருந்த பெண், மர்ம நபர்களால் கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டார். கிருஷ்ணகிரி பழைய பேட்டை பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி. 52 வயதாகும் இவருக்கு, கணவர் இறந்த நிலையில், குழந்தைகளும் இல்லை. தொண்ணைக்கான் கொட்டாய் பகுதியில் புதிதாக வீடு கட்டி வந்த சரஸ்வதி, அதே பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், சரஸ்வதி நீண்ட நேரம் ஆகியும் வீட்டில் இருந்து வெளியில் வராததால் அக்கம் பக்கத்தினர், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது சடலமாக கிடந்தார். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்