Whatsapp-ல் ஸ்டேட்டஸ் வைத்து 4 மாத கர்ப்பத்துடன் உயிரை மாய்த்த பெண்

சாத்தூர் அருகே தனது மரணத்திற்கு மாமனார், மாமியாரே காரணம் என வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு, கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் மல்லையநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் உத்தண்டிகாளை. இவரது 2வது மனைவியான வர்ஷினி 4 மாத கர்ப்பமாக இருந்த நிலையில், அவரை அவரது மாமனார், மாமியார் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வர்ஷினி, தனது சாவிற்கு தனது மாமனர் மாமியாரே காரணம் என வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com