இருசக்கர வாகனத்தில் வர மறுத்த பெண்...ஆத்திரத்தில் பெண்ணை தாக்கிய நபர்

x

அரியானாவில், தன்னுடன் இருசக்கர வாகனத்தில் வர மறுத்த பெண்ணை, ஒருவர் ஹெல்மெட்டால் கடுமையாக தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அதில், ஆட்டோவில் ஏற முயன்ற பெண்ணை தடுத்த ஒருவர், ஹெல்மெட்டால் அவரை பலமாக தாக்கும் காட்சி பதிவாகி இருந்தது. பின்னர், அங்கிருந்தவர்கள் அந்த நபரை பிடித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். விசாரணையில், பெண்ணை தாக்கிய நபர் கமல் என்பதும், தன்னுடன் இருசக்கர வாகனத்தில் வர மறுத்ததால் அந்த பெண்ணை தாக்கியதும் தெரிய வந்தது.


Next Story

மேலும் செய்திகள்