100 நாள் வேலை திட்டத்தில் வெயில் தாங்காமல் பெண் துடிதுடித்து பலி

x

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வந்த மூதாட்டி வெயில் வெப்பம் தாங்காமல் மயங்கி விழுந்து உயிரிழந்தார். காடையாம்பட்டி தாலுகா டேனிஷ் பேட்டை கிராமத்தை சேர்ந்த வேடியம்மாள் என்ற மூதாட்டி கணவரை இழந்த நிலையில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்த்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம் போல் வேலைக்கு சென்ற வேடியம்மாள் வெயிலின் கொடுமை தாங்காமல் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் நேரில் விசாரணை மேற்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்