காயிலான் கடையில் மூட்டைகளோடு... மூட்டைகளாக சடலமாக கிடந்த பெண்... அதிர்ச்சி சம்பவம்

x

மதுராந்தகம் அருகே இரண்டு நாட்களுக்கு முன் காணாமல் போன பெண், அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

மதுராந்தகம் அடுத்த சின்ன கொளம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 42வயதான காளியம்மாளை காணவில்லை என அவரது மகன் படாளம் காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், காளியம்மாளை தேடி வந்த நிலையில், அதேப்பகுதியில் சிவக்குமார் என்பவருக்கு சொந்தமான காயிலான் கடையில் மூட்டைகளோடு மூட்டைகளாக காளியம்மாளின் உடல் மீட்கப்பட்டது. இந்நிலையில் அவரது உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், தலைமறைவாக உள்ள சிவக்குமாரை போலீசார் தேடி வருகின்றனர். கொடுத்தல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்


Next Story

மேலும் செய்திகள்