லீக்கான மாணவிகளின் குளியல் வீடியோ "குளு குளு" பேக்கரியிலிருந்து வந்த போன்
சண்டிகர் பல்கலைக்கழக மாணவிகள் வீடியோ கசிந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட மாணவி, அவரது காதலன் தவிர, மற்றொரு இளைஞரையும் போலீசார் கைது செய்தனர்.
சண்டிகர் பல்கலை கழக விடுதியில் தங்கி இருக்கும் மாணவிகளின் அந்தரங்க வீடியோ இணையத்தில் வெளியானதாக பரவிய செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்கலை கழகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக விசாரித்த போலீசார் குற்றம்சாட்டப்பட்ட மாணவி மற்றும் சிம்லாவில் இருந்த அவரது காதலன் சன்னி மேஹ்தாவை கைது செய்தனர். இந்த நிலையில் வீடியோ விவகாரத்தில் சிம்லாவில் பேக்கரி ஒன்றில் வேலை பார்த்து வந்த ரங்கஜ் வர்மா என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
குற்றம்சாட்டப்பட்ட மாணவிக்கு ரங்கஜ் வர்மாவிடம் இருந்து செல்போன் அழைப்பு வந்ததால் அவர் கைது செய்யப்பட்டார். இதற்கிடையே வீடியோ விவகாரத்தில், உயர்மட்ட விசாரணைக்கு அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் உத்தரவிட்டுள்ளார்.
