"எனக்கு ஒன்னுமே தெரியாது..நான் போய் சேர்ந்திடுறேன் மாமா" - சாகும் முன் இளம்பெண் கதறிய வீடியோ

x

திருப்பத்தூரில் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் திருப்பமாக தற்கொலை செய்து கொள்வதற்கு முன் பெண் வெளியிட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே வசித்து வந்தவர் சரண்யா. இவர் 2 நாட்களுக்கு முன்பு விஷம் அருந்தியதால் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலே உயிரிழந்தார். இந்நிலையில், சரண்யாவின் தாயார் அவர் அதிக நேரம் செல்போன் பயன்படுத்துவதை கண்டித்ததால் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இதையடுத்து, சரண்யாவின் சகோதரி அளித்த புகாரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதில், சரண்யா புதுப்பேட்டையை சேர்ந்த ரானுவத்தில் பணிபுரியும் அருண் என்பவரை 3 வருடமாக காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், அருண் சில நாட்களாக சரண்யாவிடம் பேசாமல் இருந்துள்ளார். இதனால் மனமுடைந்த சரண்யா குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துள்ளார். இந்நிலையில், சரண்யா தற்கொலைக்கு முன் வெளியிட்ட வீடியோ பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்