கனரக வாகனத்துடன் மோதிய புலம்பெயர்ந்தோர் பயணித்த வேன் - சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

x

மெக்சிகோவின் வடக்கு எல்லையை அடைய முயன்ற 3 புலம்பெயர்ந்தோர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு மெக்சிகோவில் கனரக வாகனத்துடன், புலம்பெயர்ந்தோர் பயணித்த வேன் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

வெனிசுலாவைச் சேர்ந்த 2 பேரும், மத்திய அமெரிக்க நாட்டைச் சேர்ந்த ஒருவரும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெக்சிகோ வழியாக அமெரிக்காவிற்குள் நுழைய முயலும் புலம்பெயர்ந்தோர் விபத்துகளால் உயிரிழக்கும் நிகழ்வுகள் சமீப காலமாக வாடிக்கையாகி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்