மேம்பாலத்தில் பறந்த இருசக்கர வாகனம்... சுவரில் தலை மோதி பலியான கொடூர சம்பவம்

x

மதுரையை சேர்ந்த ஆனந்தகிருஷ்ணன் மற்றும் சீனிவாசன் ஆகியோர், கிணற்றில் குளித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளனர். நத்தம் பறக்கும் மேம்பாலத்தில் சென்றபோது, பாலத்தின் பக்கவாட்டுச் சுவற்றில் இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. ஆனந்தகிருஷ்ணன் சுவரில் மோதியும், சீனிவாசன் பாலத்தில் இருந்து கீழே விழுந்து தலைசிதறியும் உயிரிழந்தனர். இருவரது உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்