பழச்சந்தையில் பயங்கர தீ விபத்து! - 20 கடைகள் எரிந்து சேதம் | lucknow | thanthi tv

x

லக்னோவில் இருந்த பழச்சந்தையில் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 20 கடைகள் எரிந்து சாம்பலாகின. சீதாபூர் சாலையில் உள்ள நவீன பழச்சந்தையில் திடீரென பற்றிய தீ, அங்கிருந்த கடைகளுக்கு பரவியது. அந்த கடைகளில் இருந்த எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறியதில் பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தகவலறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். முன்னதாக தீயணைப்பு வாகனம் தாமதமாக வந்ததாக கூறி அங்கிருந்த வியாபாரிகள் தீயணைப்பு வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்