குழந்தைகளோடு பைக்கில் சென்ற டீச்சர்.. பின்னாலே வந்து செயினை பறித்த கும்பல் - நிலைகுலைந்து விழுந்ததால் நேர்ந்த கதி

x

சிவகாசி அருகே அரசு பள்ளி ஆசிரியையிடம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி தெவ்யானை நகரில் வசித்து வருபவர் ரேணுகா தேவி. அரசு பள்ளி ஆசிரியையான இவர், தனது குழந்தைகளுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர், அவரது செயினை பறித்துச் சென்றார். இதனால், நிலைதடுமாறி கீழே விழுந்ததில், ரேணுகா தேவி மற்றும் அவரது குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக, சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்