பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்...அடுத்து நடந்த அதிரடி | hosur

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்...அடுத்து நடந்த அதிரடி | hosur
Published on

ஓசூர் அருகே பிக்கனப்பள்ளி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைபள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தவர் மஞ்சுநாத். இவர் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி மாணவிகள் பெற்றோர்களிடத்தில் புகாரளித்தனர். இதையடுத்து, பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், தனிக்குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில், ஆசிரியர் மஞ்சுநாத் பாலியல் சில்மஷத்தில் ஈடுபட்டது உறுதியானதையடுத்து, அவரை பணியிடை நீக்கம் செய்து ஓசூர் மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com