ஆசியாவின் சிறந்த தடகள வீரரான தமிழர்

x

மதுரை கொடிமங்கலத்தில் விவசாய குடும்பத்தை சேர்ந்த செல்வபிரபு திருமாறன், மே 29 ஆம் தேதி வெனிசுலாவில் நடைபெற்ற சர்வதேச விளையாட்டு போட்டியில் மும்முறை நீளம் தாண்டுதலில் 16 புள்ளி 79 மீட்டர் நீளம் தாண்டி தங்கம் வென்று சாதனை படைத்தார். இதன்மூலம் 16 ஆண்டு தேசிய சாதனையை முறியடித்த செல்வபிரபு திருமாறன், அடுத்ததாக ஏசியன் அத்தலட்டிக் அசோஷியன் சார்பில் 20 வயதுக்கு உட்பட்டோருக்கான தடகள பிரிவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் 2023 ஆம் ஆண்டிற்கான ஆசியாவின் சிறந்த ஜூனியர் தடகள வீரராக செல்வபிரபு தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு வரும் 10ஆம் தேதி பாங்காக்கில் நடைபெறும் விழாவில் விருது வழங்கப்பட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்