அரசு மருத்துமனைக்கு திடீர் விசிட் - அமைச்சர் எடுத்த அதிரடி முடிவு

x

புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனரை பணியிடை நீக்கம் செய்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அன்னவாசல் நகர் நல மையத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் ஆய்வு செய்தனர். அங்கு பணியாற்றும் மருத்துவர் மற்றும் செவிலியர்களிடம் நோயாளிகளுக்கு வரும் எண்ணிக்கை மற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், அன்னவாசல் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட போது, அந்த மருத்துவமனை வளாகத்தில் தனியார் தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான மனநல காப்பகம் முறையாக செயல்படவில்லை என்பது தெரிய வந்ததாக கூறினார். இதனால், புதுக்கோட்டை சுகாதாரத்துறை இணை இயக்குனர் ராமு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதே போல் அந்த மருத்துவமனையில் தலைமை மருத்துவர் சரவணன் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா- சுப்பிரமணியன் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்