நள்ளிரவில் திடீரென பயங்கர தீ - வீட்டில் தூங்கி கொண்டிருந்த இளைஞருக்கு நேர்ந்த சோகம்

x

கோபிசெட்டிபாளையம் அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த இளைஞர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூலை மூப்பனூரை சேர்ந்தவர் அர்ஜூன். நள்ளிரவில் இவர் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது, திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் வீட்டை விட்டு வெளியேற முடியாத அர்ஜூன் வீட்டின் உள்ளேயே உடல் கருகி உயிரிழந்தார். தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த சிறுவலூர் போலீசார், விபத்திற்கு மின்கசிவு காரணமா என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்